ஆரையம்பதியில் வீதியோரத்தால் சென்ற பெண் மீது மோதிய லொறி –அதிர்ச்சியூட்டும் காணொளி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (17) மாலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை  கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் வீதியோரமாக சென்றுகொண்டிருந்த வயோதிப பெண் மீதே லொறியொன்று மோதியது சீசிரிவி கமராவில் பதிவியாகியுள்ளது.

இந்த விபத்தில் ஆரையம்பதியில் வசித்து வந்த குழந்தைவேல் நாகரெத்தினம், எனும் 75 வயதுடைய வயோதிபப் பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைததியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர.