அம்பியுலன்ஸ் மோதி விபத்து –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பகுதியில் அம்பிலன்ஸ் வண்டி மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் மண்டூர் வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.