முள்ளிவாய்க்கால் நினைவேந்;தலை ஒரு அணியில் நின்று அனுஸ்டிக்க ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒரு அணியில் நின்று அனுஸ்டிக்கவேண்டும் என வடகிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்லடி வொய்ஸ் ஒப் மீடியாவில் நடைபெற்றது.
பல்வேறு முரண்பாடுகளுக்குள் இருக்கும் தமிழ் மக்களுக்குள் அனைவரையும் ஓரணியில் இணைத்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவேண்டும் என்பதற்காகவே யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து அனைத்து பொது அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஓரணியில் நின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பவிளராஜ் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி இன்று தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டுவருவதாகவும் அவர்களின் தமிழர்களுக்கான எந்தவித நன்மையினையும் செய்யாத நிலையே இருந்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவொன்றினை அமைத்து நினைவு தினத்தினை அனைவரையும் ஓரணியில் இணைத்து இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் மே 18 நெருங்கும்போதே முள்ளிவாய்க்காலை நினைத்து பார்ப்பதாகவும் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.ஆனால் நிகழ்வினை உரிமை கோரமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக் கழக கலை கலாசார  மாணவர் ஒன்றியத்தின்தலைவர் த.புவனராஜ்,யாழ் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இ.கிரிசாந்த் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.