மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2019ம் ஆண்டுக்கான புதிய நிருவாகம் தெரிவு.


மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2019ம் ஆண்டுக்கான புதிய நிருவாகம் தெரிவு.

மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று   2019.02.19ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச  இளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரன்  அவர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் த.விமலராஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தின் ஹமீர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜே.கலாராணி, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளனத்தின் ஆலோசகரும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான மா.சசிகுமார், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு நிருவாகியும் கிராம சேவகருமான தி. தயாநிதி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


அந்த வகையில் நேற்று இடம்பெற்ற மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2019ம் ஆண்டுக்கான புனரமைப்பு பொதுக்கூட்டத்தில்
புதிய தலைவராக த.விமலராஷ்
செயலாளராக க.சசீந்திரன் (இளைஞர் சேவை அதிகாரி)
உபசெயலாளராக மு.கிருஷாந்தி
பொருளாளராக வ.கிரிசோத்ராஜ்
அமைப்பாளராக ரி.வேணுராஜ்
உபதலைவராக யோ.சூரியகுமார்
உப அமைப்பாளராக உ.நிதுசன் ,


விளையாட்டு பிரிவுக்கான செயலாளராக  கே.சஞ்ஜீவன்
கலாச்சார பிரிவுக்கான செயலாளராக அ.அனோஷா
முயற்சியான்மைபிரிவுக்கான செயலாளராக சி.லக்ஷனா
ஊடகம் மற்றும் தகவல் பிரிவுக்கான செயலாளராக அ.கேணுஜன்
தேசியசேவை பிரிவுக்கான செயலாளராக எம்.டிலஸ்கரன்
கல்வி  பிரிவுக்கான செயலாளராக
க.கலைரூபன்
நிதி பிரிவுக்கான செயலாளராக
அ.ஜகதீஸ்வரன்
சூழல் பாதுகாப்பு பிரிவுக்கான செயலாளராக
எம்.வினோஜன்
கணக்காளராக ரெ.நிரஞ்சன்

ஒழுக்காற்று குழு உறுப்பினர்களாக பி.கிஷாந், க.கஜீபன், ர.கீர்த்தனா, வ.றிசாந்தன், எஸ்.சிவாஜினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.