மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைபொங்கல் சிறப்பு வழிபாடு

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று காலை தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.

சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழர்களினால் கொண்டாடப்படும் தைத்திருநாளை முன்னிட்டு இன்று காலை ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து மாமாங்கேஸ்வர பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த தைத்திருநாள் வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.