முடங்கியது தமிழர் பிரதேசம் -கவனம் செலுத்துவாரா ஜனாதிபதி

கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதியே!பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளும் மாணவர்கள் வரவுகள் இன்மையினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதுடன் அரச நிறுவனங்கள் மக்கள் வரவின்மையினால் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவரும் நிலையிலும் மக்கள் வரவு குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

எனினும் முஸ்லிம் பிரதேசங்களில் அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களின் அனைத்து பிரதேசங்களும் செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

சில பகுதிகளில் வீதிகளில் டயர்களை எரித்து தமது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.