கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டார்.


கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமத தலைவர்களை இன்று மாலை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டு தனது வேலைகளை ஆரம்பித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள  ஸ்ரீராமகிரிஸ்ண மிசனுக்குச் சென்ற ஆளுனர் மிசனின் பொறுப்பாளர் தக்ஸஜானந்தர் சுவாமிகளிடம் ஆசி பெற்றுக் கொண்டதுடன் மட்டக்களப்பு பௌத்த விகாரைக்குச் சென்று விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரரிடம் ஆசி பெற்றுக் கொண்டதுடன் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலுக்குச் சென்று மௌலானா மௌலவி அலியார் பலாஹியிடம் ஆசி பெற்றுக் கொண்டதுடன் மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையிடமும் ஆசி பெற்றுக் கொண்டார்.
இன மத குல பேதங்களுக்கு அப்பால் அனைவரும் தமது மக்கள் என நினைத்து சமமாக தமது பணிகளை வழங்கவுள்ளதாக  ஆளுனர்  இதன்போது சர்வமதத் தலைவர்களிடம் தெரிவித்திருந்தார்.