மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் போதைப்பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய போதைபொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பிள்ளைகளிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா,மட்டக்களப்பு மாவட்ட அரச தகவல் திணைக்கள அதிகாரிகளான வ.ஜீவானந்தம்,லத்தீப் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் தேசிய போதைபொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் போதைக்கு எதிரான பாடசாலையின் பலம் என்னும் தொனிப்பொருளிலான வாரத்தின் நான்காவது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.