மட்டக்களப்பில் புற்றுநோய் தொடர்பான கலந்துரையாடல்.


இன்றைய காலச்சூழலில் மனித உயிர்வாழ்தலுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உருவெடுத்து வரும் ஒரு நோய் நிலமை புற்றுநோய்.

இந்த புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்ப்படவில்லை என்பதுடன் நோய் நிலமையை கட்டுப்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் இழப்புக்களை தாமதப்படுத்துவதற்கான வழிமுறைகளே மருத்துவ உலகில் நடைமுறையிலிருந்து வருகின்றது.

அந்த வகையில் புற்றுநோய் தொடர்பான அபாய நிலையை அறிதல் பொருட்டு பொதுக்கலந்துரையாடல் ஒன்று வைத்திய கலாநிதி சி.அகிலன் அவர்களின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

 எதிர்வரும் 25.01.2019 வெள்ளிக்கிழமை பி.ப 06.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பயன்மிகு கலந்துரையாடலில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.