ஆரையம்பதியில் கைப்பணி கண்காட்சி –நவீனத்தின் சிறப்பு

மட்டக்களப்பு,ஆரையம்பதியில் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கைப்பணிப்பொருட்களின் கண்காட்சி இன்று நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்டு கைவிணைப்பொருட்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்ட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கண்காட்சியே திறந்துவைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ரி.நவநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கே.மோகன்பிரேம்குமார் கலந்துகொண்டார்.

ஒரு வருடகாலத்தினைக்கொண்ட குறித்த கைவிணைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நெறியானது நவீனமுறையிலான வடிவமைப்புகளைக்கொண்டதாக அமைந்துள்ளது.

இந்த பயிற்சியாளர்களினால் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.