மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட நிலையிலும் முஸ்லிம் பிரதேசங்கள் ஹர்த்தாலை புறக்கணித்திருக்கின்றன.மட்டக்களப்பு நகரில் இன்று காலை முதல் பகல் வரையில் மட்டக்களப்பு நகரில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன் பகலுக்கு பின்னர் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டபோதிலும் பல வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன.
ஆரையம்பதி தொடக்கம் கல்லாறு வரையில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இதேபோன்று படுவான்கரை பகுதியிலும் பல பகுதிகளில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததை காணமுடிந்துத.
ஏறாவூர் தமிழ் பிரதேசம் தொடக்கம் வாழைச்சேனை வரையான தமிழ் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பகுதிகளில் வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்றதுடன் ஒரு சில முஸ்லிம் வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்ததை காணமுடிந்தது.
இதேநேரம் செங்கலடி பகுதி தமிழ் வர்த்தர்கள் இன்றைய ஹர்த்தாலை புறக்கணித்திருந்ததை காணமுடிந்துத.ஏறாவூர் நகரசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் நகரசபை உறுப்பினராகவுள்ளவரின் ஹோட்டலும் இன்றைய தினம் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
இதேபோன்று மட்டக்களப்பு நகரில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றுத.
அத்துடன் மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரும் வர்த்தக நிலையங்களை திறக்கவந்தவர்களை திறக்கவேண்டாம் என அழுத்தங்களை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.