பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

எகட் ஹரித்தாஸ்,மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற ஒன்றியங்களின் இணையம் அமைப்பு இணைந்து இந்த நிகழ்வினை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடாத்தியது.

இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,காணாமல்போனோர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் எம்.மோகன்,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை உட்பட மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பயங்கரவாத எதிப்பு சட்டம் கொண்டுவரப்படவுள்ள நிலையில் அது தொடர்பான நிலைமைகளை அறிந்துகொள்ளவும் அதற்கு எதிரான அழுத்தங்களை வழங்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததது.