மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பிரிவு திறந்துவைப்பு

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் அமைக்கப்பட்டுள்ள கலாசார பிரிவுக்கான கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

பிரதேசத்தின் தனித்துவத்தினையும் கலாசார,பண்பாடுகளையும் அடையாளப்படுத்தி பேணி பாதுகாக்கும் வகையில் இந்த பிரிவு தனியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி ஆh.வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது பாரம்பரிய பொருட்கள் பகுதியும் நூல் பகுதியும் திறந்துவைக்கப்பட்டது.