படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 13வது நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுவரும் உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவுத்துபியருகே இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்”என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.தவராஜா மலர் மலை அணிவித்ததை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரையாற்றப்பட்டது.

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரும் மகஜர் ஒன்றும் இதன்போது பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.