யானையின் தாக்குதலினால் அவதியுறும் தாந்தாமலை மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நேற்று இரவு யானையின் தாக்குதல்களினால் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்;லைப்புற பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாந்தாமலை பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலுக்குள்ளாகிவருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் கச்சான்,சோளன்,நெற்செய்கையில் ஈடுபடும் மக்களே அதிகளவான நிலையில் உள்ள நிலையில் யானையின் தாக்குதல்கள் காரணமாக உடமைகளை மட்டுமன்றி உயிர்களையும் இழக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் நிலவும் யானையின் தாக்குதல்கள் குறித்து கடந்த காலத்தில் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகளினால் தினமும் தமது பயிர்ச்செய்கைகள் அழிக்கப்படுவதுடன் தினமும் தாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை இலகுவில் யானைகள் கடந்துவருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யானையின் தாக்குதல்களில் இருந்து தமக்கான பாதுகாப்பினை ஏற்படுத்திதருவதற்கு உhயி அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

வாக்கு வாங்குவதற்கு மட்டும் முண்டியடித்துக்கொண்டுவரும் அரசியல்வாதிகள் தமக்கான பிரச்சினை ஏற்படும்போது பாராமுகமாக இருப்பதாகவும் தாந்தாமலை பகுதி மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.