மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 130பேருக்கு கண்சிகிச்சை –நேரில் சென்று நன்றிசொன்ன மாநகர முதல்வர்

லண்டன் வாழ் மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் அமைப்பினால், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 130 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்;கொள்ளப்பட்டன.

கண் பார்வை தொடர்பாக பல்வேறு குறைபாடுகளுடன் அதற்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளவதற்கான போதுமான நிதி வசதிகளின்றி இருந்த 130 பேருக்கு லண்டன் வாழ் மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்களின் அமைப்பின் ஊடாக இவ் இலவச சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

துறை சார்ந்த புலம்பெயர் தமிழ் வைத்திய நிபுணர்களும், மட்ஃபோதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர்களும் இணைந்து மேற்படி சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களை பார்வையிட்டதுடன் குறித்த சத்திசிகிச்சைகளுக்கு உதவிய வைத்தியசாலை நண்பர்கள் அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.