கல்லடி பாலத்தில் குதித்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியது

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து இன்று மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச பொலிஸ் பிரிவுக்குட்ப்ட பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனூஸ் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வேளையில், கல்லடிப் பாலத்தின் வாவியில் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் சடலம் இன்று மாலை கல்லடி பாலத்தருகில் கரையொதுங்கியுள்ளது.

நேற்று மாலை அவரால் செலுத்திவரப்பட்ட மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவந்தன.

மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.