மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கைகொடுக்கும் மனிதநேயப் பணியின் இரண்டாம் கட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து பாடசாலைக்கு செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (04)  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் பிரதேச செயலக வளாகத்க்தில் நடைபெற்றது.
முதற்கட்டமாக 70 மாணவர்களுக்கு அண்மையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.