எதிர்காலத்தில் இது போன்ற ஆக்க பூர்வமான இன்னும் பல பணிகளை முன்னெடுக்க வேண்டும்.



துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்
துறைநீலாவணை கிராமத்தைச்சேர்ந்த அதே பாடசாலையில் கல்விகற்ற பழையமாணவரும் அவுஸ்ரேலியா நாட்டில் வசிக்கும் ரி.ரசிகரன் அவர்களின் நிதி உதவியில்
வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.30 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பாடசாலை அதிபர் ரி.இஸ்பரன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது உரையாற்றிய பாடசாலை அதிபர் ரி.இஸ்பரன் பாடசாலை ஒன்றின் கல்வி முன்னேற்றத்திற்கு பழையமாணவர் சங்கத்தின் பணிகள்,  ஒத்துழைப்பு என்பது இன்றியமையாதது, அந்த வகையில் இந்த பாடசாலையின் நீண்ட கால குறைபாடு பழையமாணவர் சங்கம் ஒன்று இல்லாது இருந்தமை. கடந்த காலங்களில் பழையமாணவர்சங்கம் என்று இருந்த போதும் அது குறிப்பிடும் படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.

தற்போதுள்ள பழைய மாணவர் சங்கமானது ஆரம்பிக்கப்பட்டு ஆறுமாத காலம் கூட கடக்கவில்லை பல செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் இது போன்ற பல ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

 மாணவர்களே உங்களது எதிர்காலம் சிறக்கவேண்டும் உங்களுக்கு உதவி புரிந்த அந்த இளைஞனின் எதிர்பார்ப்பு நீங்கள் நாளை நல்ல திறமையான பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெயர் ஈட்டிக்கொடுக்கும் மாணவர்களாக திகழவேண்டும், அதுதான் நீங்கள் செய்யும் கைமாறு. அந்த உதவியைத்தான் நானும் இந்த பழைய மாணவர் சங்கத்தின் எதிர்பார்ப்புமாக உள்ளது என தனதுரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வில் அதிதியாக அதிதியாக மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பு.திவிதரன் கலந்துகொண்டதுடன்,  பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், நாவிதன்வெளி உதவிபிரதேச செயலாளருமான என்.நவனீதராஜா,  உட்பட பழைய மாணவர் சங்கத்தின் நிருவாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.