கூழாவடியில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி – தலை சேதமடைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையப்பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததுடன் பொலிஸ் விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

குறித்தம் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.