சிறந்த கமக்காரர் இல்லத்தை தெரிவு செய்த பயனாளிகளுக்கு காசோலை வழங்குதல்(படுவான்)


போரதீவுப்பற்று பிரதேச பிரதேச செயலகத்தில் பொருளாதார வலுவூட்டல் மற்றும் கிராம அபிவிருத்தி  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறந்த கமக்காரர் இல்லத்தை தெரிவு செய்த பயனாளிகளுக்கு பயிற்சியின் பின்னர்  நேற்று (10) திங்கள்கிழமை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் வைத்து இடம்பெற்றது.

நாற்பத்திமூன்று சிறந்த கமக்கார்களை தெரிவு செய்து விழிப்பூட்டும் கருத்தரங்கின் நிறைவின் போது பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக அல்லது ஊக்குவிப்பதற்கு ஜந்தாயிரம் பெறுமதியான காசோலைகள் வழங்கிவைப்பதோடு மற்றும் சுயதொழிலை மேற்கொள்வதற்காக ஒரு பயனாளிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்து குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவி பிரதேசசெயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் எஸ்.நாகேஸ்வரன் வளவாளர்களான விவசாய போதானாசிரியர்கள் சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் ரீ.தியாகராசா தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜீவகுமார்  மற்றும் வங்கி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்