மாவட்டத்தில் முதலிடம் கொக்கட்டிச் சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்க்கே.



மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் கொக்கட்டிச் சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்க்கே.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000கு மேற்பட்ட ஆலயங்கள் உள்ள போதிலும். அவற்றுள் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினுடைய அறங்காவல் சபையினரே அதிகமான முதன்மையான அறப்பணியை முன்னெடுத்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உரையாற்றினார்.

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர  பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை ஆசி  வேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான் தோன்றி ஸ்வரர் பேராலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. இந்த பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆசி வழங்கி பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரைநிகழ்த்தினார்.

இந்த நல்ல பணியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.

 எமது மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆலயங்கள் அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆலயங்களே மக்களுக்கான அறப்பணியை முன்னெடுத்து வருகின்றன அவற்றில் முதலிடம் பெறும் ஆலயம் என்றால் அது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயமே அதனை நான் நன்கு அறிவேன்.

 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்க்காக அதிக கரிசனையோடு செயற்படுகிறார்கள் அவ்வாறு தான் ஆலயங்கள் செயற்பட வேண்டும்,

ஆலயம் என்பது பூசை, கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளுக்கு மாத்திரமே உரித்தானது அல்ல மக்களின் சமூகத்தின் தேவை அறிந்து செயற்பட முன் வர வேண்டும்.


மாணவர்களே இறை நம்பிக்கையோடு பரிட்சைக்கு தாயாராகுங்கள் முயற்சியை கைவிடவேண்டாம்   உங்கள் எல்லோருக்கும் தான்தோன்றிஸ்வரனின் ஆசிர்வாதம் கிட்டும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு நல்ல பெறுபேறுகளை ஈட்டிக்கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

மாணவர்களே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த பரிட்சையில்  அதிகூடிய பெறுபேறுகளை பெறுகின்ற ஜந்து மாணவர்களுக்கு தரமான பெறுமதியான பரிசில்களை நான் இதே ஆலயத்தில் வைத்து வழங்கி வைப்பேன்,  எனவும் தனதுரையில் குறிப்பிட்டார் பாராளுமன்ற உறுப்பினர்.