புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு


   (லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட புலவர்மணி நினைவு பணி மன்றத்தின்  ஏற்பாட்டில் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு  நிகழ்வு இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது




மட்டக்களப்பு புலவர்மணி நினைவு பணி மன்றத்தின் தலைவரும்  கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி எஸ் சந்திரசேகரம்   தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டார் .
.
நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக இந்துகல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .இதேவேளை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள் விபுலானந்தர் அடிகளாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது .

இந்நிகழ்வினை தொடர்ந்து  இறைவணக்கத்துடன் மங்கள விளக்கேற்றப்பட்டு ,தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது

இதன்போது புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு  தினத்தை சிறப்பிக்கும் வகையில் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் உருவ படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களினால் மலர் மாலை அணிவித்து புலவர் மணிக்கு வணக்கம் செலுத்தப்பட்டது

இதனைதொடர்ந்து புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு  கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு  நிகழ்வு நடைபெற்றது ,இதன் முதல் பிரதியினை மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் பெற்றுக்கொண்டார்

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு  வலயக்கல்விப் கே .பாஸ்கரன் ,புலவர்மணி நினைவு பணி மன்ற  உறுப்பினர்கள் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் குடும்ப அங்கத்தவர்கள் ,,கலைஞர்கள் ஆசிரியர்கள் ,அதிபர்கள் ,மாணவர்கள்  என பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.