கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா



(லியோன்)

மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 2017 ஆம் வருடத்திற்கான  பரிசளிப்பு  விழா பாடசாலை அதிபர் டி யசோதரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களினால் பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு நிகழ்வுக்கு வருகைதந்த விருந்தினர்களை ஊர்வலமாக பாடசாலை பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்

இதனை தொடர்ந்து பாடசாலை முன்றலில் இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வுடன் மங்கள விளக்கேற்றப்பட்டு கல்லடி ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி மகராஜ் ஆசியுரையுடன்  பரிசளிப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில்     வெற்றிப்பெற்று சாதனைப்படைத்த  மாணவர்களையும்  2018 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும்    வழங்கப்பட்டன .

இதேவேளை இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி மகராஜ் பிரதம விருந்தனராக பாராளுமன்ற உறுப்பினர் ஞா..ஸ்ரீநேசன் ,கௌரவ விருந்தினராக  மட்டக்களப்பு மாநகர முதல்வர்  தியாகராஜா சரவணபவன் , சிறப்பு அதிதியாக , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எ .அருள்பிரகாசம்  மற்றும் பாடசாலை ,ஆசிரியர்கள் , மாணவர்கள் .பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள்  என பலர் கலந்துகொண்டனர்