வெற்றியாளர் பாராட்டு விழா

(எஸ்.நவா)

 பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த போரதீவுப்பற்று கல்வி கோட்டம் மட்/பட் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய தரம் 12 மாணவி  கலைப்பிரிவு செல்வி போ.சஜீதா சமூக விஞ்ஞான போட்டி நிகழ்வில் மாகாண  மட்டத்தில் முதலிடத்தினை பெற்றறுக்கொண்டார்
இம் மாணவி போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் கிராமத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 12 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து மட்/பட் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில்  தரம் 12 கலைப்பிரிவில் தனது கல்வியை மேற்க்கொண்டு வருகின்றார் இவர் கமூக விஞ்ஞான போட்டியில் மாகாண மட்டத்தில திறமையினை வெளிப்படுத்தி முதன்மை இடத்தினை பெற்றுக்கொண்டமையை தொடர்ந்து  (30)செவ்வாய்க்கிழமை அப்பாடசாலை சமூகம் ஒன்றிணைந்து அன்றைய தினம் பாடசாலை ஆரம்ப ஒன்றுகூடலின் போது அவரை பாராட்டி வாழ்த்தி கௌரவிக்கப்பட்டு பாராட்டு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின் போது அதிதியாக போரதீவுப்பற்று கல்விக் கோட்ட அதிகாரி திரு.ரீ.அருள்ராசாஇ கல்லூரியின் அதிபர் திரு.எஸ்.கணேசமூர்த்திஇ பிரதியதிபர் திரு.எம்.கோவிந்தராசாஇசிரேஸ்ட ஆசிரியர் திரு.பீ.சுதானந்தன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.