சுற்றுலாத்துறை விடுதி பயிற்றுவிப்பாளர்களுக்கான நான்காம் கட்ட இறுதி நாள் பயிற்சி



(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்   எஸ் போர் ஐ ஜி  அனுசரணையில் அவுஸ்ரேலியா  அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  திறன் அபிவிருத்தி  நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி  பயிற்றுவிப்பாளர்களுக்கான  நான்காம் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் இறுதி நாள் நிகழ்வு   இன்று  மட்டக்களப்பு தனியார் விடுதியில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி பயிற்றுவிப்பாளர்களுக்கான வழங்கப்பட்ட  பயிற்சிகளின்  பின்னர் தங்களது விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கு சுற்றுலாத்துறையின் .நலன்களுக்கிடையிலான முரண்பாடு , இலஞ்ச மற்றும் நிதிக் குற்றங்கள் , வர்த்தகக் கட்டுபாடுகளும் , தடைகளும் , பரிசுகளும் ,மேலதிக ,கொடுப்பனவும் ,தனிப்பட்ட தரவுகள் கையாளுதல் , வெளியக தொடர்பாடல் வேலைத்தளத்தில் கௌரமாக நடத்தல் , பல்வகைமையும் , உள்ளீர்ப்பும் ,பாதுகாப்பு ,சுற்றுச்சூழல் ,அரசியல் நடவடிக்கைகள் போன்ற  பயிற்சிகளாக  வழங்கப்பட்டு இவர்கள் விளைதிறனுடன் பணியாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கப்படவுள்ளன

மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ்    தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில் வளவாளர்களாக சுற்றுலாத்துறையில் விருந்தோம்பல் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கலான  எஸ் .கமலநாதன் , கே . பேரின்பராஜா , தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை முகாமையாளர் எஸ் எ எம் .சலீம் மற்றும் ,மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்களான என் .நிரோசன் , வி .மனோகரன் , மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள் ,சுற்றுலாத்துறை விடுதி  பயிற்றுவிப்பாளர்களுக்கான  கலந்துகொண்டனர்