புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவு கூறப்பட்டது
(லியோன்)

மட்டக்களப்ப்பு மாவட்டத்தில் புகழ்பூத்த  புலவர்மணி நினைவு பணி மன்றத்தின்  ஏற்பாட்டில் புலவர் மணி எ  பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு புளியந்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின்  பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள புலவர் மணியின் சிலை அருகில் நடைபெற்றது


மட்டக்களப்பு புலவர்மணி நினைவு பணி மன்றத்தின் தலைவரும்  கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான  கலாநிதி எஸ் சந்திரசேகரம்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக  மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,ஆகியோர் கலந்துகொண்டனர்

இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் புலவர் மணி  பெரியதம்பிப்பிள்ளையின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் .

இந்நிகழ்வில்  மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் மற்றும்  புலவர்மணி நினைவு பணி மன்ற  உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.