மாநகர சபையின் உபவிதிமுறைகளை புதிய உபவிதிகளாக மாற்றி அமைப்பதற்கான கலந்துரையாடல்


மட்டக்களப்பு மாநகர சபையின் உபவிதிமுறைகளை புதிய உபவிதிகளாக  மாற்றி அமைப்பதற்கான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகர சபை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாநகர சபையின் 1947 -16  இலக்க சுகாதார சட்டத்திற்கு அமைய  129 , 130 , 131  இலக்க உபவிதிகளுக்கு ஏற்ப மாநகர சபை அதிகாரங்களின் கீழ்  மட்டக்களப்பு மாநகர சபையில் தற்போதைய நடைமுறையில் உள்ள  உபவிதிமுறைகளை புதிய உபவிதிகளாக  மாற்றி அமைப்பதற்கான கலந்துரையாடல் இன்று (29) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
 மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல்  தலைமையில் நடைபெற்ற கலத்திரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற கழிவு முகாமைத்துவம் , நுகர்வோருக்கு சுகாதாரமற்ற  இரசாயன கலந்த  உணவு விநியோகம் , மக்கள் எதிர் நோக்குகின்ற பொது சுகாதாரம் பிரச்சினை ,  சுகாதாரமற்ற முறையில் நகர் பிரதான  வடிகான்களில் கழிவு நீர் வெளியேற்றல்  போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன

மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல்  தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ,பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , கால்நடை வைத்திய அதிகாரிகள் ,,சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் ,ஜெயிக்க தொண்டர் சேவை உறுப்பினர் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் ,வர்த்தக சங்க தலைவர் , வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் ,மாநகர சபை உறுப்பினர்கள் ,மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் , ஆகியோர் கலந்துகொண்டனர்