மாங்கேஸ்வரர் ஆலயத்தில் இலக்ஷநாம அர்ச்சனையும் இலக்ஷநாம ஹோமமும்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை முதல் இலக்ஷநாம அர்ச்சனையும் இலக்ஷநாம ஹோமமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நடைபெற்றுவரும் பிள்ளையார்  விரதத்தினை முன்னிட்டு இலக்ஷநாம அர்ச்சனையும் இலக்ஷநாம ஹோமமும் ஆரம்பிக்கப்பட்டது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களினால் இந்த ஹோமம் மற்றும் இலட்ஷார்ச்சனை நடாத்தப்பட்டது.

நாட்டு மக்கள் சகல செல்வங்களும் பெற்று சாந்தியும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக பஞ்சமுக விநாயகப்பெருமானுக்கு இந்த இலக்ஷநாம அர்ச்சனையும் இலக்ஷநாம ஹோமமும் நடாத்தப்படுகின்றது.

இதன்போது பஞ்சமுக விநாயகருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டு பஞ்சமுக விநாயகருக்கு இலக்ஷநாம அர்ச்சனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று இலக்ஷநாம ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த இலக்ஷநாம அர்ச்சனையும் இலக்ஷநாம ஹோமமும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் காலை 9.00மணிக்கு மாபெரும் மகா கணபதி ஹோமம் நடைபெறவுள்ளது.

இதன்போது இலக்ஷநாம அர்ச்சனை,இலக்ஷநாம ஹோமம் தொடர்பில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் விளக்கமளித்தார்.