மட்டக்களப்பில் சர்வதேச தபால் தினம்

சர்வதேச தபால் தினத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் திருமதி எஸ்.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரெட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பிரதி அஞ்சல்மா அதிபர் கே.விவேகானந்தலிங்கம்,பிரதி அஞ்சல்மா அதிபர் அஸ்லம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட தபால் மா அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிறந்த சேவையினையாற்றிய அஞ்சல் திணைக்களங்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிறந்த முறையில் சேவையாற்றிவரும் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள்,ஊழியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

தபால் ஊழியர்கள் எதிர்கால செயற்பாடுகளை சிறப்பான முறையில் செயற்படுத்தும் வகையிலான வெகுமதிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.