Home »
» அக்னிச் சிறகுகள் பேரவையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
அக்னிச் சிறகுகள் பேரவையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
Penulis : Suman Media on Monday, November 12, 2018 | 8:08 AM
மிகவும் வறுமையின் மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்வானது 10ஆம்,11ஆம் திகதிகளில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிபுற்குட்பட்ட மங்கிகட்டு, சொறுவாமுனை, நெல்லுச்சேனை ஆகிய கிராமங்களில் நடைபெற்து.
இந்த கற்றல் உபகரணங்களை நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையானது "மக்களின் வாழ்வு மேம்பட ஒன்று படுவோம் வென்றெடுப்போம்" எனும் தொணிப்பொருளில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உபகரணங்கள் கிராமத்தில் இருக்கின்ற சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன
மங்கிகட்டு கிராமத்தில் விநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ.சிவகுமார் முன்னிலையிலும், சொறுவாமுனை கிராமத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபை உருப்பினரும் ஆலய பரிபாலன சபை தலைவருமான த.இராமகிருஸ்ணன் முன்னிலையிலும், நெல்லுச்சேனை கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.மணோகரன் முன்னிலையிலும் வழங்கி வைக்கப்பட்டன.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment