சிசிலிய ராகங்கள் 2017 சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின்  சிசிலிய ராகங்கள் 2017   சஞ்சிகை  வெளியீட்டு நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி மேரி சாந்தினி தலைமையில் கல்லூரி வெரோனிக்கா மண்டபத்தில் நடைபெற்றது


சிசிலிய ராகங்கள் 2017  சஞ்சிகையானது கல்லூரியின் வரலாற்றையும் , , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கங்களை வெளிபடுத்தும் ஒரு சஞ்சிகையாக வெளியிடப்பட்டுள்ளது

இந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன்  கலந்துகொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார்

இந்நிகழ்வில் அதிதிகளாக  கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி எ ,நவரெட்ணம் (நவாஜி )   மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆர் ஐ .பிரபாகரன் , களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி  திருமதி . அகிலா சிவப்பிரம்யன் மற்றும் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கல்லூரி பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.