உலக மீனவர் தினம் பொலநறுவையில் அனுஸ்டிப்பு

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் கவன ஈர்ப்பு ஊர்வலமும் சர்வதேச மீனவர் தின நிகழ்வும் நேற்று நடைபெற்றது
'நீல பசுமை பொருளாதார இலக்கினுள் மறைந்து மேற்கொள்ளப்படும் வளச்சுரண்டலை நிறுத்துக மற்றும் மக்களை மையப்படுத்திய மீனவ, விவசாய, காணி தொடர்பான தேசிய கொள்கைகள் ஊடாக உணவு தன்னாதிக்கத்தை உறுதிப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

கவனயீர்ப்பு ஊர்வலமானது பொலன்னறுவை திக்கெல்ல சந்தியில் இருந்து ஆரம்பமாகி பொலன்னறுவை ரோயல் ஆரம்ப வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தினை வந்தடைந்தது.

இந்த கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் இலங்கையின் 09 மாகாணங்களிலும் இருந்தும் மாவட்ட மீனவ அமைப்புகள் கலந்துகொண்டன.இதன்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் அதனை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்வலங்களையும் மேற்கொண்டனர்.

அதனைதொடர்ந்து 22வது தேசிய மீனவர் தின நிகழ்வுகள்பொலன்னறுவை ரோயல் ஆரம்ப வித்தியாலயத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார  தலைமையில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில்பொலன்னறுவை மாவட்ட ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் வசந்த அபயகோன் கலந்து கொண்டதுடன்,மீனவர் தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு  மற்றும் நாட்டின் பல பாகங்கலிலும் இருந்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்களும், விவசாயிகளும் , மீனவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மீனவர்கள் விவசாய கொள்கையொன்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் கொள்கை பிரகடனமாக வெளியிடப்பட்டது.அத்துடன் வடகிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதேபோன்று மீனவர்களின் காணிகள் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியென்ற கோரிக்iகையினை முன்வைத்து அபகரிக்கப்படுவது தொடர்பிலும் இங்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் இதன்போது மீனவர்களின் உரிமைக்காக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்துடன் இணைந்து போராடியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.