மகிழடித்தீவு பாலர் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மகிழடித்தீவு பாலர் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ( 17 ) சனிக்கிழமை  பாடசாலையில் நடைபெற்றது


மட்டக்களப்பு (JAZ) ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப சிறார்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாக பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்

இதனுடன் இணைந்ததாக  வறுமை கோட்டின் கீழ் கல்வி பயிலும் பாலர் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன

இதற்கு அமைய  (JAZ) ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் பெற்றோர்களின் பங்களிப்பில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை - மகிழடித்தீவு பாலர் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

பட்டிப்பளை - மகிழடித்தீவு பாலர் பாடசாலை அதிபர் திருமதி சுரேஸ் கோகுலவதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன்  கலந்துகொண்டார்

நிகழ்வில் (JAZ) ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலை அதிபர் திருமதி பி என் . ஸ்டான்லி , (JAZ) ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலை ஆலோசகர் பி எஸ் ,ஸ்டான்லி , (JAZ) ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்  பாடசாலை சிறார்கள் , பட்டிப்பளை - மகிழடித்தீவு பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை சிறார்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர்