மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெற்ற மாணவனையும் ,சிறந்த தகைமை பெற்ற  மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது 
.

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச் எல் எம் .மீரா ஷாஹிப்பு  ஏற்பாட்டில்  2018  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் 196  புள்ளிகளை பெற்று  வலயம் ,மாவட்டம் ,மாகாணம்  மட்டத்தில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்ட  மாணவன் ஜெயராஜ் துகிந்த்  ரரேஷ்  மாணவனையும் சிறந்த தகமை புள்ளிகளை பெற்ற  மாணவர்களை பாராட்டி கௌரவித்து அவர்களுக்கு  பரிசில்கள்  வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு  உன்னிச்சை நெடியமடு  6ஆம் மைல்கல்  அதிபர் . எம் . பேரானந்தம் தலைமையில்  பாடசாலையில் நடைபெற்றது

கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாட்டில் நடைபெற்ற  நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மத்திய வலய கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ,மத்திய வலைய பிரதி கல்விப்பணிப்பாளர் கே. ஹரிஹரன் , பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள்  ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .