யாழ் -பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தலைமையிலான சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்


பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ .இருதயராஜா தலைமையிலான நகரசபை  உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்


மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் அழைப்பின் பேரில் யாழ்பாணம் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தலைமையிலான நகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் ,கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் /

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற மரநடுகை தொடர்பாக பூரண அறிவுரைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள குழுவினர்  மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன் மாநகர சபை அமர்வுகள் நடைபெறும் சபை மண்டபம் , முதல்வரின் அலுவலகம் ஆகிய பார்வையிட்டதுடன் , மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மரநடுகை வேலைத்திட்டங்களையும் களவிஜயத்தின் ஊடாக பார்வையிட்டனர் .

இந்த களவிஜயம் தொடர்பாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ .இருதயராஜா தெரிவிக்கையில் இந்த களவிஜயத்தின் ஊடாக பெற்றோக்கொண்ட அனுபவங்களை தமது  நகர சபைகுற்பட்ட  பிரதேசங்களில் 1000  மரக்கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்