மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார விழாவானது 23.10.2018 செவ்வாய்கிழமை பி.ப 2 மணியளவில் களுதாவனை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பமாகியது.
இவ் கலாசார விழாவிழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும் சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதனும் கௌரவ அதிதிகளாhக வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய கலாநிதி கு.சுகுணன் மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி ஞா.தில்லைநாதனும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தேற்றாத்தீவு தேனுகா கலைகழகத்தின் தமிழ் கலாசார வாத்திய குழுவினர் அதிதிகளை வரவேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. இதன் போது தமிழ் தாய் வாழ்த்தினை திருவருன் நுண்கலை மன்றமும் , கலாசார கீதத்தை தேனுகா கலைகழகத்தினாலும் இசைக்கப்பட்டதுடன் வரவேற்புரையை உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் நிகழ்த்தியதுடன் வரவேற்பு நடனத்தினை படடிருப்பு தேசிய பாடசாலை மாணவிகள் நிகழ்த்தினர்.
இவ் விழாவின் தலைமை உரையை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் நிகழ்த்தி வைத்தார். கிராமிய இசையை களுதாவனை மகா வித்தியாலய மாணவிகளும் குறவன் குறத்தி நடனத்தினை களுதாவளை நிருத்திய கலா மன்ற மாணவியரும் ஆற்றுகை படுத்தினர். எழுவான் சிறப்பு மலரினை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் முதல் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரிடம் கையளிதார் .
இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள மூத்த இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று கலாசார பேரவையால் நடாத்தடப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலைஞர்கள் கொளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்க விடயம்.






















