ஐந்து பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை


(லியோன்)

தேசிய டெங்கு ஒழிப்பு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதற்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில்  டெங்கு ஒழிப்பு  விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்துடன்  புனித தெரேசா பெண்கள்  பாடசாலை ,ஏறாவூர் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் ,ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயம் , பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின்  சுகாதார கழக ஆசிரியர்கள் மாணவர்கள்  மற்றும் பொதுசுகாதார பரிசோதர்கள் இணைந்து பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையின் கீழ்  டெங்கு ஒழிப்பு   நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன  

மாணவர்களின் டெங்கு ஒழிப்பு  செயல்திட்டத்திற்கு அமைய பாடசாலை சுற்றுசூழல் ,பாடசாலையை  அண்மித்த மாமாங்கம்  கிராம பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய வகையில் காணப்பட்ட தகர மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் ,பொலுத்தீன் போன்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள்  ஈடுபட்டனர்  .

ஐந்து பாடசாலைகள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் , பொலிஸ்,உத்தியோகத்தர்கள்  பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்