(லியோன்)
மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீனமயப்படுத்து திட்டத்துக்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீனமயப்படுத்து திட்டத்துக்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு
மாநகர சபையின் பங்களிப்புடன் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தினை நவீன
முறையில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தகரர்களுடனான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு
இன்று பிற்பகல் மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தை நவீன மயப்படுத்தும்
திட்டத்தின் இவ்வருடத்தின் முதல் கட்ட நிர்மான பணிக்காக 4 கோடி ரூபாவும் எதிர் வரும்
ஆண்டில் 2 கோடி ரூபாவும்
ஒதுக்கீடு செய்யப்பட்டு , சுமார் ஆறு கோடி ரூபா செலவில் இந்த தனியார்
பேருந்து தரிப்பிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது
இந்த நிர்மான பணிகளுக்காக
ஒப்பந்தகாரர்களுடனான கைசாத்திடும் நிகழ்வில் மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் ,
மாநகர பிரதி முதல்வர் .கே .சத்தியசீலன் , மாநகர பொறியியலாளர் ,மாநகர உறுப்பினர்கள்
, தனியார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகார சபை
அதிகாரிகள் கலந்துகொண்டனர்