" வன ரோபா 2018 “ தேசிய மரநடுகை வேலைத்திட்டம்

(லியோன்)

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக “ வன ரோபா 2018 “  தேசிய மரநடுகை  நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது


நாட்டில் 29 சதவீதமாக இருக்கின்ற காட்டு வளத்தினை   32   சதவீதமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஊடாக  சுற்றாடல் முகாமைத்துவத்தை பாதுகாத்தல் , வனசெய்கையினை மேம்படுத்துவது .காட்டு வளத்தை பாதுகாத்தல் ,பராமரித்தல் மற்றும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மரங்களை நாட்டி  வளங்களை பாதுகாத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5000 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் வேலைத்திட்டத்தின்  14 பிரதேச செயலக பிரிவுகளிலும்  நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன ..

இதற்கு அமைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும்  நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தில்  அரசாங்க அதிபரினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மரக்கன்று நடுகையினை ஆரம்பித்து வைத்தார்

இந்நிகழ்வில் மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்