கிழக்குமாகாண சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றது


ஐக்கிய நாடுகளின் அமைப்பினால் இம்முறை “ மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கு முன்நின்ற மூத்த பிரஜைகளை கௌரவத்துடன் சிறப்பிப்போம் “எனும் தொனிப்பொருளில்  சிரேஷ்ட பிரஜைகளை பெருமை படுத்துமுகமாக 2018 ஆம் ஆண்டு முதியோர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும்  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட கிழக்குமாகாண சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும்  நிகழ்வு மாவட்ட சமூக சேவை  உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி தலைமையில்  மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பூங்காவில்  நடைபெற்றது  நடைபெற்றது  .  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எ எச் எம் .அன்சார் , சிறப்பு அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்சினி  ஸ்ரீகாந்த் , கௌரவ அதிதியாக கிழக்குமாகாண சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்  எ எம் எம் .அலியார் , ஓய்வுநிலை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் . செல்வநாயகம் , கிழக்குமாகாண முதியோர் சம்மேளன தலைவர் கே .நடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்

கிழக்குமாகாண சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வில் சர்வதேச முதியோர் தினத்தை  முன்னிட்டு  நடத்தப்பட்ட வினா விடை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் , சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களுக்கும், ,சிறந்த பிரதேச மட்ட முதியோர்களை கௌரவித்து பரிசில்களும் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலக உத்தியோகத்தர்கள்     கிழக்குமாகாண முதியோர்  சம்மேளன  உறுப்பினர்கள் , மாவட்ட முதியோர் சங்கங்களின் உறுப்பினர்கள் , பிரதேச மட்ட சிரேஷ்ட பிரஜைகள் கலந்துகொண்டனர்