மாறிவரும் உலகில் இளம் பராயத்தினரை பாதுகாப்போம்


(லியோன்)

சர்வதேச உளவள தினத்தை முன்னிட்டு “மாறிவரும் உலகில் இளம் பராயத்தினரும் அவர்களின் உள சுகாதாரமும் “ எனும் தொனிப்பொருளில் குறு நாடக விழா  மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் , மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயம் , மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் இணைந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் சர்வதேச உளவள தினத்தை சிறப்பிக்கும் வகையில் “ மாறிவரும் உலகில் இளம் பராயத்தினரும் அவர்களின் உள சுகாதாரமும் “ எனும் தொனிப்பொருளில் குறு நாடக விழா மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

மாறிவரும் உலகில் இளம் பராயத்தினரை பாதுகாக்கும் நோக்கில் குறு நாடகங்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகள் மட்டத்தில் உளவள நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றது  

இந்த குறு நாடக விழா நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .அருள்பிரகாசம் , வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர் எ .ஜெகநாதன் , மக்கள் தொடர்பாடல் சமூக பாதுகாப்பு  பொலிஸ் உத்தியோகத்தர்  அன்புராஜ் , மற்றும் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்