பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி –மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் நிர்வாக உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .

இலங்கை அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளை,ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் என்பன இணைந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

நிர்வாக அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்னும தொனிப்பொருளிளல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்தினம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் மரம் ஒன்றை வெட்டுவது தொடர்பில் மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கடமையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்;னத்தின் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார்.

பொலிஸார் மத்தியில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக நிர்வாக உத்தியோகத்தர்கள் தமது கடமையினை செய்வதற்கு முறையான பாதுகாப்பினை வழங்குமாறு கோரியோ இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள்,நிர்வாக உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள் என பெருளமாளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு ஆர்பாட்டத்தினை முன்னெடுத்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்  அதிகாரிகளுடைய கடமைகளை சீராகவும் , தங்கு தடை இன்றி செய்வதற்கு  உத்திரவாதத்தினையும் ,பாதுகாப்பினையும் இந்த அரசும்  உயர் அதிகாரிகளும் பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊர்வலகமாக சென்று மட்;டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

நிர்வாக அதிகாரிகள் பௌத்த மதகுரு ஒருவரினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டுவருவதாகவும் இதன்காரணமாக தமது சேவையினை செய்வதில் பாதுகாப்பு இல்லாத நிலையிருப்பதாகவும் இங்கு நிர்வாக உத்தியோகத்தர்களினால் அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,

குறித்த சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்புடும் எனவும் இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலகங்கள் வெளியாரினால் பூட்டுகள் போடப்பட்டு பூட்டப்பட்டது தொடர்பிலும் தமக்கு முறையிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.