, விசர்நாய்க்கடி தடுப்பு நடவடிக்கையின் நாய்களுக்கு கருத்தை தடை ,தடுப்பூசி


(லியோன்)

ஆட்கொல்லி நோயான விசர்நாய்க்கடி தடுப்பு நடவடிக்கையினை தேசிய வேலைத்திட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டும் விசர்நாய்க்கடி தடுப்பு  நடவடிக்கைகளும்  விழிப்புணர்வு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


கால்நடை  உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் ஒக்டோபர் 29 ஆம் திகதி தொடக்கம்  நவம்பர் 02  ஆம் திகதி வரை  ஆட்கொல்லி நோயான விசர்நாய்க்கடி தடுப்பு  வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய வேலைத்திட்டமாக விசர்நாய்க்கடி தடுப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன .

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் ஆட்கொல்லி நோயான விசர்நாய்க்கடி தடுப்பு நடவடிக்கையினை  கீழ் மட்டக்களப்பு பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுத்து வருகின்றனர்

இதன் கீழ் மட்டக்களப்பு பகுதியில் நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும்  , நாய்களுக்கு கருத்தை தடை செய்யும் நடவடிக்கைகளும்  மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் திருமதி .உதயராணி குகேந்திரன தலைமையின்  கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு ஊர்வலமும் , விழிப்புணர்வு வீதி நாடகமும் முன்னெடுக்கப்பட்டன .
இந்த நிகழ்வுகளில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக வைத்திய அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் ,,ஊழியர்கள் ,,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்