சர்வதேச உளநல விழிப்புணர்வு ஊர்வலமும் கண்காட்சியும்


   
(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட உளநல உதவி நிலையத்துடன் மட்டக்களப்பு வன்னாத்துபூச்சி சமாதான பூங்கா இணைந்து  சர்வதேச உளநல தினைத்தை முன்னிட்டு ‘ “மாறிவரும் உலகில் இளம்பராயமும் உளநலமும் “  எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட  விழிப்புணர்வு ஊர்வலமும் கண்காட்சியும் மட்டக்களப்பில்  நடைபெற்றது 


நாற்பட்ட உளதாக்கம் கொண்டவர்களுக்கும் பாகுபாடற்ற இலவச உடல் ,உளநல பணி செய்து ஆரோக்கியமுடன் வாழ வழிகாட்டும் மனிதநேயப் பணிகள் என்ற ஒன்பது தலைப்பின்கீழ்  ‘ “மாறிவரும் உலகில் இளம்பராயமும் உளநலமும் “  எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட  விழிப்புணர்வு ஊர்வலமும் கண்காட்சியும் நடைபெற்றது
இதன் போது ஆளுமை விருத்தியுடாக ,ஆரோக்கியமான ,
ஆரோக்கியமற்ற குடும்ப நல் வால்வினுடாக
தம்பதிகளின் நல் உறவினுடாக
மகிழ்ச்சியான கல்விகூட  மானவர்களுக்கூடாக
இளம் சமூகத்தினரின் மாறுபாடான செயல்களில் சிக்குண்டோர்
நாட்பட்ட உளதாக்கத்திற்கான ஆலோசனையினூடாக
பாதிப்புக்களால் ஏற்படும் நெரக்கடி , பதட்டம் என்பவற்றை கையாளும்  முறை
உடல் ,.உள ஞானம் பெற்றுக்கொள்ள
ஒரு நிமிடம் கொடுத்து இதயத்தை திறந்து ஆலோசாகருடன் வாழ போன்ற தலைப்புகளுடன்  உளநல தொடர்பான ஊர்வலமும் கண்காட்சியும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்  நடைபெற்றது

மட்டக்களப்பு  உளநல உதவி நிலையம் மற்றும் மட்டக்களப்பு வன்னாத்துபூச்சி சமாதான பூங்கா இயக்குனரும் இயேசு சபை துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில்  நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதிகளாக  மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை  இயேசு சபை துறவி லோரன்ஸ் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டார்

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற உளநல தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்திலும்  கண்காட்சி நிகழ்விலும் மட்டக்களப்பு  உளநல உதவி நிலைய உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு வன்னாத்துபூச்சி சமாதான பூங்கா நிர்வாக உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் ,, பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்