சிங்கள மொழி பாடநெறியினை பூர்த்தி செய்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



(விளாவூர் நிருபர்)

தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரனையில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்திய இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறி 100 மணித்தியால செயலமர்வு இறுதிநாள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (13.10.2018) மட்டக்களப்பு மேற்கு கல்வி வயத்திற்குற்பட்ட குறிஞ்சாமுனை அ.த.க பாடசாலையில் பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமானது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக
அரச சகவாழ்வு நல்லினக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களும்,
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் கரிகரராஜ் அவர்களும் மற்றும் இந்த பாட நெறியினை பூர்த்தி செய்த அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொன்டனர்.

இந்த நிகழ்வின் போது பாடநெறியினை பூர்த்தி செய்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிங்கள மொழியிலான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.