மட்டக்களப்பின் பெயருக்கு அபகீர்த்தி –வீதியில் இறங்கி எதிர்த்த ஆசிரிய மாணவர்கள்

மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு எதிராக கல்லூரி ஆசிரிய மாணவர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

இன்று காலை மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.
குடந்த திங்கட்கிழமை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனவுளைச்சலுக்கு உள்ளாகி முதலாம் வருட மாணவன் ஒருவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

இதனை சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மாணவர்களின் பகிவதையினால் மனவுளைச்சலுக்குள்ளாகி குறித்த மாணவன் தற்கொலைசெய்துகொண்டதாக செய்திகளை வெளியிட்டிருந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆசிரிய மாணவர்கள் சில ஊடகங்கள் ஊடக தர்மத்தினையும் ஊடக நடைமுறையினையும் மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

மட்டக்களப்புக்கும் இங்குள்ள மாணவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்து வகையில் இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் ஆசிரிய மாணவர்கள் தெரிவித்தனர்.

ஊடக தர்மத்தினை பேணி நட,மனநோயெனில் நீங்களா வைத்தியம்பார்த்துக்கொள்ளுங்கள்,ஊடக வன்முறை வேண்டாம்,எதிர்கால ஆசிரியர்களை மனம் தளரச்செய்யாதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.சமூக நல்லொழுக்கம்,சிறந்த பண்பாடுகளை பேணிவரும் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் கௌரவத்திற்கு இழுக்கினை ஏற்படுத்தும் சமூக விரோதிகளை கண்டிக்கின்றோம் என்று இதன்போத தெரிவிக்கப்பட்டத.
தேசிய கல்வியியல் கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரையம்பதி வரையில் கண்டன பேரணியை நடாத்தியதுடன் மீண்டும் கல்லூரிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.

ஆதனைத்தொடர்ந்து கல்லூரி தொடர்பில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரும் மகஜர் ஒன்றும் கல்லூரியின் முதல்வர் எஸ்.இராஜேந்திரமிடம் வழங்கப்பட்டது.

ஊடகங்கள் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையாக செய்திகளை பிரசுரிக்கவேண்டும் எனவும் பக்கச்சார்பான செயற்பாடுகளினால் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் எனவும் இங்கு கருத்து தெரிவித்த கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.