எருவில் பகுதியில் தாய் செய்த மோசமான செயல் -வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி

ஒரு குழந்தையினை உருவாக்குவதற்கு பெற்றோர் பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்கின்றனர்.அதன்மூலம் சிறந்த பண்பான சமூகத்தினை உருவாக்கின்றனர்.

ஆனால் சிலர் தமது குழந்தைகளிடமே தமது வக்கிரபுத்திகளை காட்டி எதிர்காலத்தில் அவர்களை இந்த நாட்டில் ஒரு குற்றவாளியாகவோ சமூகத்திற்கு எதிரானவர்களாகவோ உருவாக்கும் பெற்றோரும் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.

தான்பெற்று வளர்த்த பிள்ளையினையே தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்;டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

11வயதுடைய சிறுமியே தாயினால் இரும்புக்கம்பினை காய்ச்சி சூடுகள் வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி இன்ற பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியினை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் இரண்டு கைப்பகுதியிலும் வாய்ப்பகுதியில் இந்த சூடு வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.