ஏறாவூர் பற்று பிரிவின் முதலாவது ‘கம்பெரலிய’ துரித கிராமிய அபிவிருத்தித் திட்டம்





ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவின் முதலாவது திட்டம் இன்று சித்தாண்டி கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களின் ‘கம்பெரலிய’ துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழான ரூபா ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், சித்தாண்டி கிராமத்தின் மகா பெரியதம்பிரான் ஆலயத்துக்கான புனரமைப்பு வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

‘கம்பெரலிய’ துரித கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளையும் வழிபாட்டு தலங்களையும் மேம்படுத்துவதற்காகவும் புனரமைப்பதற்காகவும் மேற்படி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் படுகின்றது. இந்த நிதியினை மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் மிகவும் தேவையுள்ள பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிதி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவும் எதிர்வரும் 30.11.2018 நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டியுள்ளதால் மிக துரிதமாக இந்த வேலைகளை செய்து முடிவுறுத்தப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் ஆலய நிருவாகிகள் ,ஊர் பிரமுகர்கள் மற்றும் போது மக்கள் கலந்து கொண்டனர்.