கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய வங்கி முகாமையாளர்களுடனான கலந்துரையாடல்



(லியோன்)


மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள கைத்தொழில் துறைசார்ந்த அபிவிருத்தியை  நோக்கிய ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட முன்னேற்றத்தை அடைவதற்கான , வங்கி முகாமையாளர்கள் மற்றும் மாவட்ட கைத்தொழில் நிறுவ உரிமையாளர்களுடனா கலந்துரையாடல் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப துறை பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன தலைமையில்  இன்று மாட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது


இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப துறை  அமைச்சின் செயலாளர் எஸ் .பாலசுப்பிரமணியம் கிழக்கு மாகாண பிராந்திய பணிப்பாளர் திருமதி சுனேன்றா கோரல ஆராச்சி, மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ நவேஸ் வரன், அம்பாறை மாவட்ட கைத்தொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் எச் எம் .ஜோதிபால , மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் எம் ஜி .பந்துல , கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப துறை நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் இந்திக  மற்றும் வங்கிகளின்  முகாமையாளர்கள் ,  கைத்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்   

இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில்  உரையாற்றிய அமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவிக்கையில்  கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு .அம்பாறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கைத்தொழிலில் ஈடுபட்டு நிறுவனங்கள் முகம்கொடுத்துள்ள  பிரச்சினைகள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கும் இவர்களின் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறையினை குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் முன்னேற்றத்தை அடைவதற்குமான கலந்துரையாடலுக்கு எமது அமைச்சி அதிகாரிகளுடன் வந்துள்ளேன் ,

எமது அமைச்சானது இலங்கையில் இரண்டாவதாக அதிக திணைக்களங்களை கொண்டு அமைச்சாகும் , ஜனாதிபதி ,,பிரதம மந்திரி மற்றும்  அமைச்சர் ரிசாத் பதுர்தீன் ஆகியோரின் பணிப்புரையின் கீழ் நான் இந்த பிரதி அமைச்சு பதவியை ஏற்று பத்து வாரங்கள் ஆகுகின்ற நிலையில் நான் ஒரு தீர்மானம் எடுத்துள்ளேன் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன் இந்த கைத்தொழில் நிறுவனங்களில் எதிர் நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு உத்தேசித்துள்ளேன் ,

இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும் கலந்துரையாடல்கள்  முன்னேடுக்கப்பபடவிருந்த போதிலுளும் , கிழக்குமானத்தின் புவியியல் நிலைமையை கொண்டு இலங்கையில் அதிக பரப்பளவை கொண்ட  மாகானமானதால் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது .

அதில் ஒன்றுதான் இன்று மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல்  .  நான் உங்களுக்கு ஒன்று கூறுவதில் மகிழ்சி அடைகின்றேன் , கைத்தொழில் வரலாற்றில் நாட்டில் அதிகம் வேலைவாய்ப்புகளை வழங்ககூடியதும்  அதேபோன்று பொருளாதாரத்திற்கு அதிக லாபத்தையும் ,மூலப்பொருட்களையும் ,உற்பத்தி செய்கின்ற ஒரு தினைக்களமாகவும் இலங்கையின் மேன்மையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல கூடிய நிறுவனமாகும்

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்களை நிறைவடைகின்றது , எழுவது வருட சுதந்திரத்தை பினோக்கி பார்ப்போமானால் நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நிறைய விடயங்கள் இருந்த போதிலும் , அதிகமாக கவலைப்படக்கூடிய விடயங்கள் , சத்தம்போட்டு அழுவதற்கான பல விடயங்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது .

முப்பது வருட காலப்பகுதியில் மூன்று யுத்தங்கள் இடம்பெற்றுள்ளது , வடக்கு கிழக்கு யுத்தத்திற்கு அப்பால் தெற்கில் இரண்டு முறை இளைய தலைமுறைகள் அழிக்கப்பட்டது, அதற்கு காரணம் எழுவது வருடம் ஆட்சி செய்த பச்சை நிற அரசாங்கமும் , நீல நிற அரசாங்கமும் செய்த மோசமான ஆட்சியாகும் .

தற்போது நாம் புதிய பிரவேசத்தையும் ,புதிய  பயணத்தை தொடரவேண்டிய நிலையுள்ளது .விசேட விதமாக கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப துறையை போன்று மக்களின் கைத்தொழில் உற்பத்திகள்  மற்றும் வர்த்தக தொழில்  பின்னோக்கிய நிலையில் உள்ளதாகவே எனது நிலைபாடு ,  கைத்தொழில் மற்றும் வர்த்தக  துறையை மேம்படுத்துவதாக சம்பந்தப்பட்ட கைத்தொழில் நிறுவனங்களுக்கு சகல வசதிகளை செய்து அதற்கான இடம் வசதிகளை செய்து தருவதாக கூறி  அழைப்பு விடுக்கப்பட்ட  போதிலும் ,அவற்றை முறையாக செய்யாத காரணத்தினால் அவர்கள் இப்போது  பாதிப்படைந்த  நிலையில் உள்ளனர் .

இதன்  காரணாம நான் யோசனை செய்கின்றேன் இன்றைய இலங்கையின்  உட்கட்டமைப்பை மற்றும் அல்ல இன்னும் இருவது வருடங்களுக்குள் எதிர்கால இலங்கையை மாற்றுவதற்கு இன்று  முயற்சித்துள்ளேன் .

இன்று சில சிங்கள ,தமிழ் ,.முஸ்லிம் அரசியல்  வாதிகள் ,மற்றும் நீலநிற அரசாங்கம் , பச்சை நிற அரசாங்கம் , நீளம் பச்சை கலந்த அரசாங்கம்  தொடர்ச்சியாக  இனங்களுக்கிடையில்  இனவாதத்தை தூண்டினார்கள் , இனங்களுக்கிடையில் மோதலை  ஏற்படுத்தினார்கள் ,   அனைவரையும் ஏமாற்றினார்கள் ,இதற்காக  பாரிய பொய்களை கூறினார்கள் ,அதற்கான பிரதி பலனை நாம் அனுபவித்துள்ளோம் ,
அந்த நிலையை மாற்றி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப துறை பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவித்தார்